×

சென்னையில் கடந்த 7 நாட்களில் 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது..!!

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 28.07.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 422 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 130 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 178 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 05 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 07 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 16 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் படுத்திய 05 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 04 குற்றவாளிகள் என மொத்தம் 796 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், இ.கா.ப, உத்தரவின்பேரில் கடந்த 22.07.2024 முதல் 28.07.2024 வரையிலான 7 நாட்களில் 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் 1.லாசர் மெர்வின், வ/39, த/பெ.ஜோசப் செல்வம், சூளை மேடு, சென்னை 2.அஜித்குமார் (எ) செந்தில் வ/25, த/பெ.விஜயகுமார், நீலாங்கரை, சென்னை 3.தமீம் சீலன் (எ) சீலன் வ/27, த/பெ.தமீன், அமைந்தகரை, சென்னை 4.மதன் குமார் (எ) மதன், வ/36, த/பெ.மனோகரன், வியாசர்பாடி, சென்னை 5.சலீம் பாஷா (எ) சலீம், வ/29, த/பெ.அஜிஸ், அரும்பாக்கம், சென்னை ஆகிய 5 நபர்கள் 15.06.2024 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்திலும்,

6.சூர்யா, வ/23, த/பெ.சிட்டிபாபு, செங்குன்றம், சென்னை 7.ராஜேஷ், வ/30, த/பெ.மூர்த்தி, வில்லிவாக்கம், சென்னை 8.அலெக்ஸாண்டர், வ/30, த/பெ.சாமுவேல், வில்லிவாக்கம், சென்னை 9.நவீன்குமார், வ/23, த/பெ.ஏழுமலை, மாடம்பாக்கம், சென்னை 10.சரவணன் வ/25, த/பெ.ரமேஷ், வில்லிவாக்கம், சென்னை ஆகியோர் சேர்ந்து கடந்த 26.05.2024 அன்று உதயகுமார் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக V-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்திலும், 11.செந்தில்குமார் வ/42, த/பெ.மனோகரன், வியாசர்பாடி, சென்னை என்பவர் கடந்த 24.06.2024 வசந்தா என்ற பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக P-5 எம்.கே.பி நகர் காவல் நிலையத்திலும்,

12.ஷ்யாம் (எ) சாமுவேல், வ/25, த/பெ.ரூபன், திருவொற்றியூர், சென்னை 13.ஜீவா (எ) ஜீவானந்தம், வ/24, த/பெ.வேதாச்சலம், திருவொற்றியூர், சென்னை 14.ராம் (எ) ராமச்சந்திரன், வ/31, த/பெ.சுப்பையா, திருவொற்றியூர், சென்னை 15.முரளி வ/33, த/பெ.மோகன், திருவொற்றியூர், சென்னை ஆகிய 4 நபர்கள் சேர்ந்து கடந்த 11.06.2024 அன்று ராசய்யா என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் 16. நித்தியானந்தம், வ/27, த/பெ.மூர்த்தி, கொட்டிவாக்கம், சென்னை என்பர் கடந்த 11.06.2024 அன்று கௌதம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக J-6 திருவான்மியூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், இ.கா.ப மேற்படி குற்றவாளிகள் லாசர் மெர்வின் விஜய், அஜித்குமார் (எ) செந்தில், தமீம் சீலன் (எ) சீலன், மதன் குமார் (எ) மதன், சலீம்பாஷா (எ) சலீம், சூர்யா, ராஜேஷ், அலெக்ஸாண்டர், நவீன் குமார் சரவணன், செந்தில் குமார், ஷ்யாம் (எ) சாமுவேல், ஜீவா (எ) ஜீவானந்தம், ராம் (எ) ராமச்சந்திரன், முரளி மற்றும் நித்தியானந்தம் ஆகிய 16 நபர்களை கடந்த 23.07.2024 அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 16 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

The post சென்னையில் கடந்த 7 நாட்களில் 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Police ,Commissioner ,Gang Detention Police ,
× RELATED சென்னையில் உள்ள காவல் நிலையங்களில்...