×

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து விற்பனை

சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் ரூ.4.50 குறைந்து ரூ.1,924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிலிண்டர் விலை ரூ.4.50 குறைக்கப்பட்டு 1,924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக கேஸ் சிலிண்டர் விலை கடந்த 22ம் தேதி ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.4.50 குறைக்கப்பட்டு 1,924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலை ரூ.918.50-ல் நீடிக்கிறது.

The post சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...