×

செங்கல்பட்டில் நாளை மறுநாள் விவசாயிகள் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (27ம் தேதி) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் தவறாது பங்கேற்று விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post செங்கல்பட்டில் நாளை மறுநாள் விவசாயிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpat ,Chengalpattu ,Collector ,Arunraj ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்...