×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலைக்குப்புற கிடக்கும் இருக்கைகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அமரும் இருக்கைகள் தலைக்குப்புற கிடக்கும் அவலம்நிலை உள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மகாபலிபுரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்தும் தினமும் 3 ஆயிரம் முதல் 5ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

இதில், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நோயாளிகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் இவர்களுக்கு பாதுகாப்புக்கு வரும் உதவியாளர்கள் என அவர்கள் உட்காருவதற்கு போதுமான இடவசதி இல்லை. குறிப்பாக, பொது மருத்துவம், கல்லீரல், நுரையீரல், இருதய சிகிச்சைப்பிரிவில ஏராளமான நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அனுமதி சீட் வாங்கவும் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதில், நோயாளிகளின் உறவினர்களோ அல்லது உதவியாளர்களோ வரிசையில் நின்றாலும் நோயாளிகள் அமர்வதற்கு போதுமான இருக்கைகள் இல்லை.

குறிப்பாக, ஏற்கனவே இருந்த நாற்காலிகளும் தலைக்குப்புற கவிழ்க்கப்பட்டு கிடப்பதையும் நோயாளிகள் கால்கடுக்க நிற்பதையும் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உள்பட நேருக்கு நேர் பார்த்தும் கவிழ்த்து கிடக்கும் இருக்கைகளை நிமிர்த்தி வைக்க ஏற்ப்பாடு செய்யாமல் கண்டும் காணாமல் செல்லும் அவலம் இந்த மருத்துவமனையில்தொடர்ந்து அறங்கேறி வருகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகள், அவரது உதவியாளர்கள், உறவினர்கள் அமர்வதற்கும் இலைப்பாருவதற்கும் இருக்கைகளையும் அதற்குறிய இடங்களையும் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேயாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

The post செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலைக்குப்புற கிடக்கும் இருக்கைகள் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Government Hospital ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு கிராம சபை...