×

சந்திரபாபு நாயுடு நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் பெற்ற சர்வேயர் சஸ்பெண்ட்

திருமலை: ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவின் நிலத்தை அளந்துகொடுக்க, ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய துணை சர்வேயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த பொறுப்பெற்றுள்ளார். இவர் கடந்த 2019-24 கால கட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, குப்பம் தொகுதிக்குட்பட்ட சாந்திபுரம் மண்டலம் கடப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள சிவபுரத்தில் விவசாய நிலம் வாங்கி உள்ளார். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அந்த விவசாய நிலத்தில் வீடு கட்ட நில பயன்பாட்டு மாற்றத்திற்கு தெலுங்கு தேசம் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நிலத்தை பிரித்து தரும்படி நிலஅளவைத் துறையிடம் கேட்ட போது, துணை சர்வேயர் சதாம் உசேன் ரூ.1.80 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச பணத்தை சதாம் உசேனிடம் தெலுங்கு தேசம் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் இறுதியில் குப்பம் வந்திருந்தார். அப்போது, தெலுங்கு தேசம் கட்சியினர் உங்களது நிலம் என்று தெரிந்தும் துணை சர்வேயர் சதாம் உசேன் லஞ்சம் வாங்கினார் என்று தெரிவித்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் சுமித் குமார் மற்றும் இணை ஆட்சியர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் விவாரணை நடத்தினர். அப்போது துணை சர்வேயர் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இந்தநிலையில், கடந்த 27ஆம் தேதி சாந்திபுரம் மண்டலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், நில அளவைக்கு விண்ணப்பித்த போது அவரிடமும் துணை சர்வேயர் சதாம் உசேன் ரூ.1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது பற்றி அந்த விவசாயி அதிகாரிகளிடம் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதிலும் சதாம் உசேன் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டதால் துணை சர்வேயர் சதாம் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post சந்திரபாபு நாயுடு நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் பெற்ற சர்வேயர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Tirumala ,Kuppam ,Andhra Pradesh ,Chief Minister ,Dinakaran ,
× RELATED பாலாற்றில் எத்தனை இடங்களில் முடியுமோ...