×

டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் நேற்று அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் நிலவியது. மேலும், தஞ்சாவூர், கோவை, வேலூர் மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் அதிமான வெப்பநிலை காணப்பட்டது.

சென்னை சேலம், தூத்துக்குடி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும், கோவை, கடலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. ந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், வட தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.

ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும். உள் தமிழகத்தில் அதி வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம். குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Karur Paramathi ,Thanjavur ,Coimbatore ,Vellore ,
× RELATED சாலைகளில் திரியும் மனநலம்...