×

உள்ளாட்சி மன்ற தலைவர், உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி மன்ற தலைவர், உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000, துணை மேயர்களுக்கு ரூ.15,000 மதிப்பூதியம் வழங்கப்படும் எனவும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 மதிப்பூதியம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

The post உள்ளாட்சி மன்ற தலைவர், உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M.K.Stalin ,
× RELATED துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து