×

மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்த துணை முதல்வர்: பணிச்சுமை அதிகமானதால் திடீர் முடிவு

மும்பை: மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநர் பதவியை மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் திடீரென ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதம் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டதால், அக்கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் தலைமையிலான பிரிவின், சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் இணைந்தது. மகாராஷ்டிர துணை முதல்வரான அஜித் பவார், தற்போது புனே மாவட்ட மத்திய கூட்டுறவு (பிடிசிசி) வங்கியின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

துணை முதல்வர் பதவியை தற்ேபாது அவர் வகித்து வருவதால், பிடிசிசி வங்கியின் பணியானது மேலும் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், கட்சிப் பணியும் அதிகரித்துள்ளதால், அவர் இயக்குநர் பதவியில் இருந்து விலகியதாக அந்த வங்கியின் தலைவர் டாக்டர் திகம்பர் துர்கேட் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான அஜித் பவார், கடந்த 1991ம் ஆண்டு முதல் வங்கியின் இயக்குநராக பணியில் இருந்து வந்தார். அஜித் பவார் இயக்குநராக பணியாற்றிய காலத்தில், வங்கியின் மதிப்பு ரூ.558 கோடியாக இருந்தது; ஆனால் தற்போது ரூ.20,714 கோடியாக உள்ளது.

The post மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்த துணை முதல்வர்: பணிச்சுமை அதிகமானதால் திடீர் முடிவு appeared first on Dinakaran.

Tags : CM ,Central Co-operative Bank ,Mumbai ,Maharashtra ,Deputy Chief Minister ,Ajit Pawar ,Central Cooperative Bank ,Maharashtra… ,Dinakaran ,
× RELATED சென்னானூர் அகழாய்வில் இரும்பு...