×

டெல்லியில் இன்று காவிரி ஆணைய அவசர கூட்டம்

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 88வது ஒழுங்காற்று குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. 16ம் தேதி காலை எட்டு மணி முதல் 31ம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது அவசர கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு சார்பாக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் தமிழ்நாட்டு அதிகாரிகள் வினாடிக்கு 16000 கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவரிடம் வலியுறுத்த உள்ளனர்.

The post டெல்லியில் இன்று காவிரி ஆணைய அவசர கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Cauvery Commission ,Delhi ,New Delhi ,Cauvery Water Management Authority ,Cauvery Authority ,Dinakaran ,
× RELATED முதல்வர் பதவி கேட்பேன்: பாஜவில் சலசலப்பு