×

காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

டெல்லி: டெல்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடபட்டதாக தெரிவித்தனர். ஆனால் கர்நாடக அரசு உத்தரவு பிறபித்த 4, 5 நாட்களுக்கு மட்டுமே 5,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டதாகவும், அதன் பிறகு வினாடிக்கு 4,000 கனஅடி முதல் 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு குறைந்து விட்டதாகவும் தெரிவிக்கபட்டது.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் காவிரி பாசன பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யபட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் மழை இல்லாத காரணத்தால் பயிர்கள் கருகும் சூழல் நிலவுகிறது. எனவே அந்த பகுதில் தண்ணீர் என்பது விவசாயத்திற்கு தேவைபடுகிறது. எனவே தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் கர்நாடக அதிகாரிகள், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததன் காரணமாக நீர் வரத்து குறைந்துள்ளது. எனவே தற்போதைய சூழலில் தங்களால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என தெரிவித்தனர். இரு தரப்பு கருத்துகளையும் கேட்ட பிறகு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினித் குப்தா, செயளாலர் சி.டி.சர்மா ஆகியோர் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவது அவசியம் என்று இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யபட்டு, பரிந்துரையானது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வைக்கபட்டுள்ளது. இந்த பரிந்துறையை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் விரைவில் டெல்லியில் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது

The post காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kaviri ,Delhi ,Kaviri Water Regulatory Committee ,Cavieri Tamil Nadu ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...