×
Saravana Stores

காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க வேண்டும்.. மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது: அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்..!!

டெல்லி: மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுடன் அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகம் ஷ்ரம்சக்தி பவனில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் மணிவாசகன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், பொதிகை தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் கூட்டத்தில் பங்கேற்றனர்.

டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி உள்ளோம். காவிரி நீர்ப்பங்கீடு, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் சி.ஆர்.பாட்டீலு ஆலோசித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதாந்திர அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கு எந்த ஆண்டும் கர்நாடகா தண்ணீர் வழங்கியது. மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளோம். காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

 

The post காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க வேண்டும்.. மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது: அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Meghadatu ,Minister ,Duraimurugan ,Delhi ,Union Water ,Resources ,CR Patil ,Meghadatu Dam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளிட்ட 4...