×

காலிபிளவர் 10க்கு விற்பனை

 

போச்சம்பள்ளி, ஆக.28: போச்சம்பள்ளியில், விளைச்சல் அதிகரிப்பால் காலிபிளவர் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் காலிபிளவர் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு காலிபிளவர் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு லோடு கணக்கில் கால பிளவர் விற்பனக்கு கொண்டு வந்து, கூவி கூவி விற்பனை செய்தனர்.கடந்த காலங்களில் ஒரு காலிபிளவர் 50க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிரித்துள்ளதால் 2 கிலோ கொண்ட ஒரு காலிபிளவர் 10 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் சந்தைக்கு வந்த மக்கள காலிபிளவரை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

The post காலிபிளவர் 10க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி