×

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (88) காலமானார்!

தென் அமெரிக்கா: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (88) காலமானார். 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். 2013ம் ஆண்டு போப் பதவியில் இருந்து 26வது பெனடிக்ட் விலகியதை தொடர்ந்து பிரான்சிஸ் போப் ஆண்டவர் ஆனார்.தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவை பூர்வீகமாக கொண்டவர் போப் பிரான்சிஸ். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உள்ளிட்டோர் போப் ஆண்டவரை சந்தித்து ஆசி பெற்று இருந்தார்.

இருப்பினும், கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை மோசமாகவே இருந்தது. வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக போப் பிரான்சிஸ் சிகிச்சையில் இருந்து வந்தார். மேலும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், வாடிகனில் உள்ள தனது வீட்டில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டது. ஈஸ்டர் பண்டிகைக்கு மறுநாள் போப் பிரான்சிஸ் காலமாகி உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (88) காலமானார்! appeared first on Dinakaran.

Tags : Pope Francis ,Catholic Church ,South America ,Pope Lord Francis ,Catholic Christian Congregation ,POPE ,
× RELATED மிரட்டலுக்கு பணிந்தது அதிமுக – பாமக (அ)...