×

’ சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் பழைய வீடியோக்கள்: காங். பகிர்ந்து விமர்சனம்

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடி, அவரது முந்தைய வீடியோக்களில் எப்படியெல்லாம் பேசியிருக்கிறார் என்பது தொடர்பான வீடியோக்களை காங்கிரஸ் பகிர்ந்து விமர்சித்துள்ளது. பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய பாஜ அரசு முடிவு செய்ததை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடியின் பழைய 2 வீடியோ பதிவுகளை பகிர்ந்து கூறியிருப்பதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் ஏப்ரல் 30ம் தேதி மோடி அரசு எதிர்பாராத விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திடீர் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது, இந்த அறிவிப்புக்காக பிரதமர் மோடி பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

ஆனால், 2023 அக்டோபர் 2ம் தேதி பீகாரின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிட்ட போதும், 2024 ஏப்ரல் 28ம் தேதி காங்கிரசின் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கைகள் குறித்தும் அவர் பேசிய வீடியோக்களை பாருங்கள். அதில் பிரதமர் மோடி, ‘எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் சமூகத்தை பிரித்தனர். இப்போதும் அந்த பாவத்தை தொடர்கின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரசின் கோரிக்கைக்கு அவர், நகர்ப்புற நக்சல் மனநிலையின் ஒரு பகுதி என விமர்சித்தார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post ’ சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் பழைய வீடியோக்கள்: காங். பகிர்ந்து விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,New Delhi ,Ministers ,Deputy Chief Ministers' ,BJP ,National Democratic Alliance ,Delhi ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...