மாலே: பிரதமர் மோடி கடந்த வாரம் லட்சத்தீவு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து கிண்டலடித்து விமர்சித்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, ‘’மாலத்தீவை புறக்கணியுங்கள்’’ ஹேஷ்டேக் வைரலானது. இந்தியர்களால் முன்பதிவு செய்யப்பட்ட ஓட்டல்கள் புக்கிங்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாலத்தீவு சுற்றுலாத் துறை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘’இணை அமைச்சர்களின் அவதூறு கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மாலத்தீவின் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு இந்தியா நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருந்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மாலத்தீவு சுற்றுலா துறை விடுபட இந்தியா பெரிதும் உதவியது. மாலத்தீவின் முன்னணி சந்தை நாடாக இந்தியா விளங்குகிறது. கடந்தாண்டில் மாலத்தீவுக்கு வருகை தந்த 17 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளில் இந்தியாவில் இருந்து மட்டும் 2,09,198 பேர் வருகை தந்துள்ளனர்,’’ என்று கூறப்பட்டுள்ளது.
The post முன்பதிவை ரத்து செய்யும் இந்தியர்கள் மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு appeared first on Dinakaran.