×

மோர் குழம்பு

தேவையான பொருட்கள்:

மசாலா அரைக்க

துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
தண்ணீர் – ½ கப் (ஊற வைக்க)
துருவிய தேங்காய் – ¼ கப்
பச்சை மிளகாய் 3-5
இஞ்சி – சிறிய துண்டு

மற்றவை

வெள்ளை பூசணி – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மோர் – 1.5 கப்
கடுகு – ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு மற்றும் அரிசியை குறைந்தது அரை மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். பின்னர் தயிரை அடித்து மோர் தயாரித்து கொள்ளவும்.இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் இஞ்சி, ஊற வைத்த அரிசி மற்றும் துவரம் பருப்பு, பச்சை மிளகாய், தேங்காய், தனியா மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் தண்ணீர், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதில் நறுக்கி வைத்துள்ள வெள்ளை பூசணி சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.பூசணிக்காய் நன்கு வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்க்கவும்.இதை குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும்.
இறுதியாக அடித்து வைத்துள்ள மோர் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.அடுத்ததாக ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து மோர் குழம்பில் கொட்டவும். மோர் குழம்பு தயார்! இதை சூடாக வடித்த சாதத்துடன் பரிமாறலாம்.

 

 

 

 

 

The post மோர் குழம்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED முட்டை சேமியா