×

செங்குன்றத்தில் தீ பற்றி எரிந்த கழிவு பொருட்கள்

புழல்: செங்குன்றத்தில் கழிவு பொருட்கள் தீ பற்றி எரிந்தன. செங்குன்றம் அடுத்த விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணம்பாளையம், விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக அரசின் உரிய அனுமதி இல்லாமல் பல இடங்களில் பழைய பிளாஸ்டிக் குடோன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குடோன்களில் சேரும் கழிவு பொருட்கள் வெளியில் வீசப்பட்டு அதை சிலர் தீவைத்துக் கொளுத்தப்படுவதாக ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா மீரான் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று கண்ணம்பாளையம் நாகாத்தம்மன் கோயில் பின்புறம் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இருந்து வெளியேற்றப்பட்ட பழைய கழிவு பொருட்கள் நேற்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து 3மணி நேரம் போராடி கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இதே போல் செங்குன்றம் அடுத்த பெரியார் நகர் திருவள்ளுவர் தெருவில் பழைய பிளாஸ்டிக் குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. இந்த 2 தீ விபத்து குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post செங்குன்றத்தில் தீ பற்றி எரிந்த கழிவு பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Sengunram ,Kannampalayam ,Vlankatupakkam ,Panchayat ,Senggunram ,
× RELATED புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து...