×
Saravana Stores

அண்ணனின் மூலம் கர்ப்பமான சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் 17 வயது அண்ணனின் மூலம் கர்ப்பிணியான 12 வயது சிறுமியின் எட்டரை மாத கருவை கலைக்க அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுமியின் பெற்றோர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருந்தது: எங்களது 12 வயது மகள் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். எங்களது 17 வயதான மகனின் மூலம் தான் மகள் கர்ப்பிணி ஆனாள். இந்த சிறு வயதில் குழந்தை பெற்றால் அவளது மனநிலை பாதிக்கப்படும். எனவே மகளின் கருவைக் கலைக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியது: சிறுமி தற்போது எட்டரை மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கரு கிட்டத்தட்ட முழு வளர்ச்சி அடைந்து விட்டது. இந்த சூழ்நிலையில் கருவை கலைப்பது சிறுமியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே 9 மாதங்கள் ஆன பிறகு பிரசவத்திற்கான தேதியை டாக்டர்கள் நிர்ணயிக்க வேண்டும். அதுவரை சிறுமியை அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும். குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தைக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுமியின் பெயர், விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் விவரங்களை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

The post அண்ணனின் மூலம் கர்ப்பமான சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Thiruvananthapuram ,Kerala ,
× RELATED குழந்தைகள் முன் நிர்வாணமாக...