×

மணிப்பூர் அமைச்சர் வீடு மீது குண்டு வீச்சு: 2 பேர் படுகாயம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் துங்கிய கலவரம் இன்னமும் முழுமையாக ஓயவில்லை. நேற்று மணிப்பூரின் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கேம்சந்த் யம்னம் வீட்டின் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடந்தது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள அமைச்சர் வீட்டுக்கு நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் பைக்கில் வந்த இரு மர்மநபர்கள் திடீரென கையெறி குண்டை வீட்டை நோக்கி வீசினர்.

அந்த குண்டு அமைச்சரின் வீட்டு மெயின் கேட் அருகில் விழுந்து வெடித்து சிதறியது. திடீரென வெடித்த கையெறி குண்டால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை காவலரும், ஒரு பெண்ணும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பார்வையிட்டார்.

The post மணிப்பூர் அமைச்சர் வீடு மீது குண்டு வீச்சு: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,minister ,IMBAL ,Panchayathuraj ,Dinakaraan ,
× RELATED குடியரசுத்தலைவர் உரையின்போது...