×
Saravana Stores

தமிழக கடற்கரைகளுக்கு நீலக்கொடி அந்தஸ்தை பெற அரசு நடவடிக்கை: சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க திட்டம்

சென்னை: தமிழக கடற்கரைகளில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க நீலக்கொடி அந்தஸ்தை பெற தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் ஒன்றாக கடற்கரை எப்போது தனி இடத்தை கொண்டிருக்கும். அதன்படி, கடற்கரைக்கு வருவோருக்கு தேவையான குடிநீர், குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவதற்கான சூழல், படுத்து ஓய்வெடுக்கும் வசதி, சாய்வு தள நாற்காலிகள், குப்பை இல்லாத சுகாதாரமான கடற்கரை, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவதற்கான வசதி, கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து வசதி, கடலில் குளிப்பதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற வசதிகள் உடைய கடற்கரைகளுக்கு தான் நீலக்கொடி அந்தஸ்து வழங்கப்படும்.

அந்தவகையில், இதுபோன்ற அனைத்து தேவைகளும் பூர்த்தி அடையக்கூடிய கடற்கரைகளுக்கு தான் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக, வெளிநாட்டு பயணிகளை வெகுவாக கவர இதுபோன்ற வசதிகள் அவசியம். அதனடிப்படையில், தமிழ்நாட்டில் கோவளம் கடற்கரையில் தான் இத்தகைய வசதிகள் தற்போது உள்ளன. இந்த கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, சுற்றுலா பயணிகளை கவரவும், மற்ற கடற்கரைகளை பேணிக்காக்கும் வகையிலும் அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post தமிழக கடற்கரைகளுக்கு நீலக்கொடி அந்தஸ்தை பெற அரசு நடவடிக்கை: சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...