×

கருங்குழியில் விபத்து, நோயால் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்

மதுராந்தகம். கருங்குழியில் விபத்துக்கள் மற்றும் நீரிழிவு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கால்களை இழந்து நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும், அவர்கள் பிறர் உதவியின்றி தாங்களாகவே நடந்து செயல்படும் வகையிலும் கருங்குழி அரிமா சங்கம் சார்பில் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இதில், மதுராந்தகம், கருங்குழி, வந்தவாசி வேடந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 22 நபர்களுக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்டு அவர்களுக்கு அது சரியாக பொருந்துகிறதா என நடக்க வைத்தும் பார்த்தனர். மேலும் அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் இந்த சங்கத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

The post கருங்குழியில் விபத்து, நோயால் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால் appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Karunkuzhi ,Arima Sangam ,Karkunguzi ,
× RELATED மதுராந்தகம் பகுதிகளில் மழையால்...