×

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கான நிபந்தனை ஜாமினில் மாற்றம் செய்து ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கான நிபந்தனை ஜாமினில் மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. தமிழக பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. சென்னையை சேர்ந்தவர். இவர் மீது மார்க்சிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்தும் ட்விட்டரில் பொய்யான தகவல் பதிவிட்டதாக மதுரை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் சூர்யாவை மதுரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சூர்யா ஜாமீன் பெற்றார். அச்சமயம் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 30 நாட்கள் தினமும் காலையில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என எஸ்.ஜி.சூர்யாவுக்கு நீதிபதி நிபந்தனை விதித்தார். நீதிமன்ற நிபந்தனையின் பேரில் சூர்யா மதுரையில் தங்கியிருந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சில நாட்கள் கையெழுத்திட்டார். இதனிடையே, சென்னையில் உள்ள உறவினர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என கூறி ஜாமினில் மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட் கிளையில் எஸ்.ஜி.சூர்யா மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், நிபந்தனை ஜாமினில் மாற்றம் செய்து உத்தரவிட்டார். எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜெ.எம்.1 நீதிமன்றம் விதித்த நிபந்தனை ஜாமினில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை போலீசில் 30 நாள் கையெழுத்திட நிபந்தனை விதித்த நிலையில் சென்னை சைபர் கிரைம் போலீசில் தினமும் கையெழுத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கான நிபந்தனை ஜாமினில் மாற்றம் செய்து ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Surya ,Jamin ,iCort ,Madurai ,Raja ,Dinakaran ,
× RELATED இனியும் பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை: திருச்சி சூர்யா பதிவு