- பிஜே
- ராஜ்நாத் சிங்
- எடியூரப்பா
- வசந்துரா
- மகாஜன்
- பிரகாஷ்
- காங்கிரஸ்
- ஜெய்ப்பூர்
- உதய்பூர், ராஜஸ்தான்
- யூனியன்
- உள்துறை அமைச்சர்
- அமித் ஷா
- ராஜஸ்தான்
- பாஜக
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாரிசு அரசியல் பற்றி பேசினார். இதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா பதிலடியாக அளித்த பதில்: காங்கிரசை ஒரு குடும்பத்தின் கட்சி என்கிறார்கள். அப்படிச் சொன்னால் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் யார்? ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் எம்எல்ஏ இல்லையா? வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் எம்பி இல்லையா? பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் இல்லையா? அரசியலில் வேத் பிரகாஷின் மகன் பியூஷ் கோயல் இல்லையா? கிரண் மகேஸ்வரியின் மகளுக்கு பாஜ டிக்கெட் கொடுக்கவில்லையா? பாஜ தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படாது என்று அறிவிக்க முடியுமா? முதலில் அதைச் செயல்படுத்த முடியுமானால், பின்னர் கேள்விகளை எழுப்புங்கள். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
The post பா.ஜவில் வாரிசு அரசியல் இல்லையா? ராஜ்நாத்சிங், எடியூரப்பா, வசந்துரா, மகாஜன், பிரகாஷ் வாரிசுகள் யார்?: காங்கிரஸ் ஆவேச கேள்வி appeared first on Dinakaran.