சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் தனி அணி அமைப்பதில் எடப்பாடி உறுதியாக இருந்து வருகிறார். பாஜகவின் செயலால் ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணி உடைந்தது. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற்றப்பட்டது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தங்களுடைய தொழில் வளர்ச்சிக்காகவும், தொழிலை காப்பாற்றுவதற்காகவும், சுயலாபத்துக்காகவும் பிஜேபியுடன் செல்வாக்கு இல்லாத கட்சிகள் தான் கூட்டணி அமைத்துள்ளன. அதாவது நிர்வாகிகளே இல்லாத கட்சியில் உள்ள ஜி.கே.வாசன், வேலூரில் மட்டுமே சமுதாய பலத்தில் உள்ள ஏ.சி. சண்முகம், பெரம்பலூர் பகுதியில் மட்டும் தொண்டர்கள் பலம் கொண்ட பாரிவேந்தர், தென்மாவட்டங்களில் ஒருசாரார் ஆதரவு தெரிவிக்கும் ஜான் பாண்டியன், எந்த ஆதரவுமே இல்லாத தேவநாதன் யாதவ் போன்றவர்கள் தான் பாஜக கூட்டணியில் உள்ளனர். அவர்களிடம் பேசுவதற்காக தமிழக பாஜக மூத்த தலைவர்கள் அடங்கிய கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி தனி அணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக செல்வாக்கு, தொண்டர்கள் பலம் உள்ள பாமக, தேமுதிக ஆகியவற்றுடன் அதிமுக கூட்டணிக்கு தயாராகி வருகிறது. இவர்களிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஓரிரு நாளில் கூட்டணி உறுதியாகி, தொகுதிகள் அறிவிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் பாஜக, அதிமுக உறவு இனிமேல் கிடையாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்து வருகிறார். ஆளுங்கட்சியாக இருந்த போது அதிமுக தலைவர்கள் அமலாக்கத்துறை பயத்தில் தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தற்போது எதிர்க்கட்சி என்பதால் தற்போது அதிமுகவுக்கு பயம் போய் விட்டது.
பாஜக இல்லாததால் 18 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை பெற்று விடலாம் என்று எடப்பாடி நினைக்கிறார். இதற்காக தான் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜகவிற்கான எதிர்ப்பு அலை என்பது மக்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த 10 ஆண்டு ஒன்றிய பாஜக ஆட்சியில் எந்த திட்டத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு எந்த நிவாரணமும் இதுவரை ஒதுக்கவில்லை என்பதில் மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். வடமாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒரு நிலைப்பாடு, தமிழகத்திற்கு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நாமும் சேர்ந்து அழிந்து விடுவோம் என்று எடப்பாடி கருதுகிறார். அப்படி பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் டெபாசிட் கிடைக்காமல் போய்விடும் என்று எடப்பாடி இருந்து வருகிறார். இதற்காக தான் இனிமேல் ஒரு போதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. தனி அணி என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு வரும் என்ற நினைப்பில் வலிய வந்து ஆதரவு கொடுக்கும் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனின் ஆதரவை ஏற்று கொள்ளாமல் பாஜக இருந்து வருகிறது. இதனால், இதுவரை இவர்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதனால், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
பாஜகவை நம்பி தான் கட்சியில் இருந்து வெளியேறினோம். இப்போது கட்சி பறிபோனது தான் மிச்சம் என்று புலம்ப தொடங்கி விட்டனர். இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் எடப்பாடி தனி அமைப்பத்தில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால், நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பதை ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் ஆகியார் புறக்கணித்துள்ளனர். கூட்டணியில் பெரிய கட்சிகள் சேர வாய்ப்பில்லை என்பதால் தமிழக பாஜக தோல்வி பயத்தில் கடும் அதிருப்தியில் இருக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சியில் எந்த திட்டத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு எந்த நிவாரணமும் இதுவரை ஒதுக்கவில்லை என்பதில் மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். வடமாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒரு நிலைப்பாடு, தமிழகத்திற்கு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நாமும் சேர்ந்து அழிந்து விடுவோம் என்று எடப்பாடி கருதுகிறார். அப்படி பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் டெபாசிட் கிடைக்காமல் போய்விடும் என்று எடப்பாடி இருந்து வருகிறார். இதற்காக தான் இனிமேல் ஒரு போதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. தனி அணி என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு வரும் என்ற நினைப்பில் வலிய வந்து ஆதரவு கொடுக்கும் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனின் ஆதரவை ஏற்று கொள்ளாமல் பாஜக இருந்து வருகிறது.
இதனால், இதுவரை இவர்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதனால், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். பாஜகவை நம்பி தான் கட்சியில் இருந்து வெளியேறினோம். இப்போது கட்சி பறிபோனது தான் மிச்சம் என்று புலம்ப தொடங்கி விட்டனர். இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் எடப்பாடி தனிஅணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால், நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பதை ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் ஆகியார் புறக்கணித்துள்ளனர். கூட்டணியில் பெரிய கட்சிகள் சேர வாய்ப்பில்லை என்பதால் தமிழக பாஜக தோல்வி பயத்தில் கடும் அதிருப்தியில் இருக்கிறது.
The post தமிழகத்தில் தோல்வி பயத்தில் பாஜக; தனி அணி அமைப்பதில் எடப்பாடி தீவிரம்: அதிர்ச்சியில் ஓபிஎஸ், டிடிவி appeared first on Dinakaran.