×

பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகாராஷ்டிராவின் பெருமை மீட்டெடுக்கப்படும்: அமித் ஷா பேச்சு

சந்திராபூர்: மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகாராஷ்டிராவின் பெருமை மீட்டெடுக்கப்படும் என அமித் ஷா கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 பேரவை தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் சந்திராபூர் பகுதியில் நேற்று நடந்த பாஜ தேர்தல் பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக மோடி ரூ.15.10 லட்சம் கோடி அளித்துள்ளார். அத்துடன் மகாராஷ்டிராவில் மேலும் பல வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகாராஷ்டிராவின் இழந்த பெருமை மீட்டெடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமித் ஷா, “ சட்டீஸ்கரில் 2026 மார்ச் 31க்குள் நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

The post பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகாராஷ்டிராவின் பெருமை மீட்டெடுக்கப்படும்: அமித் ஷா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,BJP alliance ,Amit Shah ,Chandrapur ,
× RELATED அம்பேத்கார் பற்றி அமித் ஷா சர்ச்சை பேச்சு.. மும்பையில் விபிஏ போராட்டம்