×

97வது பிறந்த நாள் அத்வானிக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: பாஜ மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி நேற்று தனது 97வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி அத்வானியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மூத்த தலைவர் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இந்தியாவில் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதிகளில் அத்வானியும் ஒருவர். அவர் இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார். அவரது அறிவுத்திறன் மற்றும் வளமான நுண்ணறிவுக்காக அவர் எப்போதும் மதிக்கப்படுகிறார். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

The post 97வது பிறந்த நாள் அத்வானிக்கு பிரதமர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : PM ,Advani ,New Delhi ,BJP ,Deputy Prime Minister ,LK Advani ,Modi ,
× RELATED டெல்லி மருத்துவமனையின் ஐசியூ-வில் அத்வானி