×

திருப்பதி கோயிலில் ஜூனில் ரூ.166 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி கோயிலில் ஜூன் மாதத்தில் 20 லட்சத்து 187 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இதன் மூலம் உண்டியலில் ரூ.166.14 கோடி காணிக்கையாக கிடைத்தது. கடந்த 18ம் தேதி அதிகபட்சமாக ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4.59 கோடியாக கிடைத்தது. ஜூன் மாதத்தில் 11 நாட்களாக ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடிக்கு மேல் பக்தர்கள் செலுத்தினர்.

இந்தாண்டு இதுவரை ஜனவரியில் ரூ.123.7 கோடியும், பிப்ரவரியில் ரூ.114.29 கோடியும், மார்ச்சில் ரூ.120.29 கோடியும், ஏப்ரலில் ரூ.144.12 கோடியும், மே மாதத்தில் ரூ.109.99 கோடியும், ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.166.14 கோடி உண்டியல் வருமானம் கிடைத்து உள்ளது. அதன்படி, இந்தாண்டில் 6 மாதத்தில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையின் மூலம் ரூ.777.9 கோடி தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது.

The post திருப்பதி கோயிலில் ஜூனில் ரூ.166 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati Temple ,Tirumala ,
× RELATED திருப்பதியில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் முன்பதிவு முடிந்தது