×

பைக் மீது தண்ணீர் லாரி மோதியது சாலையில் விழுந்த வாலிபர் சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி: சாந்தி காலனியில் கோர விபத்து

அண்ணாநகர்: பைக் மீது தண்ணீர் லாரி மோதியதில் சாலையில் விழுந்த வாலிபர், அந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை அம்பத்தூர் அடுத்த அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தேவநாயகம்(21). இவரது சித்தி மகன் வசந்த்(21). இவர்கள் இருவரும் நேற்றிரவு பைக்கில் அயனம்பாக்கத்தில் இருந்து திருமங்கலத்துக்கு சென்றனர். அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியில் வந்தபோது பின்னால் வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி, அவர்களது பைக் மீது ேமாதியது. இதில் வேதநாயகம், வசந்த் ஆகியோர் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது வேதநாயகத்தின் வலது தொடையில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் ரத்தவெள்ளத்தில் துடித்தார். இவற்றை பார்த்து தம்பி வசந்த் கதறி அழுதார்.

இந்த விபத்து பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் வந்து விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி டிரைவரை மடக்கி பிடித்தபோது லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வேதநாயகத்தை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ‘’வரும் வழியிலேயே இறந்துவிட்டார்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த வசந்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்கு கொண்டுசென்றனர். சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் வேதநாயகம், 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு மேல் படிப்பு படிக்க முடிவு செய்திருந்தாராம். இந்த ஆசை நிராசையாக போனதால் அவரது பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post பைக் மீது தண்ணீர் லாரி மோதியது சாலையில் விழுந்த வாலிபர் சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி: சாந்தி காலனியில் கோர விபத்து appeared first on Dinakaran.

Tags : Shanti Colony Annanagar ,Shanti Colony ,Dinakaran ,
× RELATED தயாரிப்பு முறையில் பல்வேறு...