×

பாரத்-இந்தியா பெயர் விவகாரம் ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி தடை

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாடு அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது என சர்ச்சை எழுந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா மற்றும் பாரத் என்ற பெயர் சர்ச்சை பற்றி கடந்த 2 நாட்களாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தின. இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார். இதில் இந்தியா மற்றும் பாரத் விவகாரம் பற்றி யாரும் பேச வேண்டாம். அதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜி 20 மாநாடு முடிந்த பிறகு இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

The post பாரத்-இந்தியா பெயர் விவகாரம் ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி தடை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Bharat ,New Delhi ,India ,G20 Summit ,Delhi ,Modi ,Union ,Dinakaran ,
× RELATED நாட்டின் முதல் வந்தே பாரத் மெட்ரோ...