×

பாகல்பூரில் பாலம் இடிந்து விழுந்ததற்கு பாஜக தான் காரணம்: பீகார் அமைச்சர் குற்றசாட்டு

பாகல்பூரில் பாலம் இடிந்து விழுந்ததற்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம் என பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். பாலத்தை பாஜக இடித்தது. நாங்கள் பாலம் கட்டுகிறோம், அவர்கள் அதை இடிக்கிறார்கள் என்றார். இதனிடையே, பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து விழுந்தது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி பீகார் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு பீகாரை இணைக்கும் ககாரியாவில் உள்ள அகுவானியிலிருந்து சுல்தாங்கஞ்ச் வரையிலான 3 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் கட்டப்பட்டு வருகிறது. எஸ்பி சிங்லா நிறுவனம் 1711 கோடி செலவில் பாலத்தை கட்டி வருகிறது. பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த இந்த பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதோடு, இதற்கு காரணமானவர்களை அடையாளம் காணவும் உத்தரவிட்டார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கனவு திட்டத்தில் இந்த பாலம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பாகல்பூரில் பாலம் இடிந்து விழுந்ததற்கு பாஜக தான் காரணம்: பீகார் அமைச்சர் குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : bajka ,bagalpur ,bhakar minister ,Bihar ,Minister ,Tej Pratap Yadav ,Bharatiya Janata Party ,Bhagalpur ,Bhakhalpur bridge ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி பற்றி அவதூறு கருத்து...