பாக்கு தோப்பில் முகாமிட்ட யானைகள் டிரோனில் கண்காணித்து விரட்டியடிப்பு

கோவை: கோவை, போளூவம்பட்டி, மதுக்கரை வன சரக்கத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி மருதமலை அடிவாரப் பகுதி மற்றும் விளை நிலங்களில் அடிக்கடி சுற்றி திரிந்து வருகின்றன. இந்த நிலையில் வனத்திலிருந்து வெளியேறிய 20 யானைகள் கொண்ட கூட்டம் நரசிபுரம் பகுதியில் நேற்று முகாமிட்டன. இதில் மக்களால் ‘அரிசி கொம்பன்’ என அழைக்கப்படும் யானை மட்டும் முட்டத்து வயல் பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்றுவிட்டு பூண்டி வனப்பகுதியில் ஒதுங்கியது.

இதை தொடர்ந்து குட்டி மற்றும் மூன்று யானைகள் கொண்ட கூட்டம் செம்மேடு தனியார் பாக்கு தோட்டத்தில் புகுந்தன. அப்போது யானைகள் சோர்வாக இருந்ததால் தோப்பிற்குள்ளேயே இருந்து பாக்கு மரங்களை தின்றன.
விவசாயிகள் மூலம் இதையறிந்த மதுக்கரை வனத்துறையினர் விரைந்து வந்து டிரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இந்த நிலையில் நேற்று அமாவாசை என்பதால் பூண்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வந்தனர். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு யானைகள் பாக்கு தோப்பிலே இருக்குமாறு அதனை விரட்டாமல் பார்த்துக் கொண்டனர். பின்னர் இருட்டாக தொடங்கியதும் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர்.

குட்டி இருப்பதால் காட்டு யானைகள் வீரகாளியம்மன் கோவில் பகுதியில் முகாமிட்ள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். காட்டு யானைகள் வருகை அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

The post பாக்கு தோப்பில் முகாமிட்ட யானைகள் டிரோனில் கண்காணித்து விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: