×

வெளிநாட்டு பயணிகள் வரும் இடங்களில் உள்ள கேரள ஓட்டல்களில் பீர், ஒயின் விற்க அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் இடங்களிலுள்ள ஓட்டல்களில் சீசன் சமயங்களில் பீர், ஒயின் விற்க அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் புதிய மதுக் கொள்கைக்கு நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இது குறித்து கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ் கூறியது: புதிய மதுக் கொள்கையின்படி கள் விற்பனையை ஊக்குவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேரளா கள் என்ற பெயரில் புதிய கள் வகை அறிமுகம் செய்யப்படும். கேரளாவிலுள்ள அனைத்து கள்ளுக் கடைகளும் நவீனப்படுத்தப்படும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடங்களிலுள்ள ஓட்டல்களில் சீசன் சமயங்களில் பீர், ஒயின் விற்க சிறப்பு லைசென்ஸ் வழங்கப்படும்.கேரளாவில் கிடைக்கும் பழ வகைகளில் இருந்து குறைவான போதையுடன் கூடிய மது, ஒயின் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வெளிநாட்டு பயணிகள் வரும் இடங்களில் உள்ள கேரள ஓட்டல்களில் பீர், ஒயின் விற்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED கேரளாவில் 10ம் வகுப்பு...