×

காய்கறி பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி 2 கப்,
பாசிப்பருப்பு ¼ கப்,
பீன்ஸ்,
கேரட்,
பச்சை பட்டாணி தலா 50 கிராம்,
பச்சைமிளகாய் 2,
மிளகு,
சீரகம் தலா அரை டீஸ்பூன்,
நெய் ¼ கப்,
உப்பு தேவைக்கு,
கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

குக்கரில் நெய்விட்டு சூடானதும் மிளகு, சீரகம் தாளிக்கவும். பெரியதாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி 5 கப் நீர் விட்டு, அரிசி பருப்பு களைத்து சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக விடவும். 2 விசில் வந்ததும் பத்து நிமிடம் சிறிது தணலில் வைத்து இறக்கி கறிவேப்பிலை தூவவும். சுவையான காய்கறி பொங்கல் தயார்.

The post காய்கறி பொங்கல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்