×

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்

ஜம்மு: இமயமலையில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழுவினர் நேற்று அமர்நாத் புறப்பட்டு சென்றனர். தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பனி உறைந்து சிவலிங்க வடிவத்தில் காட்சி தரும். இயற்கையாக உருவாகும் இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி தொடங்கிய யாத்திரை ஆகஸ்ட் 19ம் தேதி வரை நிறைவடைய உள்ளது. இதற்கான முன்பதிவுகள் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. அதன்படி ஜம்முவின் பகவதி நகரில் இருந்து புறப்பட்ட 4,603 பேர் அடங்கிய முதல் குழுவின் அமர்நாத் யாத்திரையை காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடந்த 28ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 2வது குழு நேற்று முன்தினம் அதிகாலை புறப்பட்டு சென்றது. இதன் தொடர்ச்சியாக 1,141 பெண்கள் உள்பட 6,619 யாத்ரீகர்களை கொண்ட 3வது குழுவினர் 319 வாகனங்களில் நேற்று அதிகாலை அமர்நாத் புறப்பட்டு சென்றனர்.

The post பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம் appeared first on Dinakaran.

Tags : Amarnath ,Bani Lingam ,JAMMU ,Snow Lingam ,Himalayas ,Amarnath Cave Temple ,Himalayan ,South Kashmir ,
× RELATED 74000 பேர் பனிலிங்க தரிசனம்