×

3X3 கூடைப்பந்து போட்டி; தமிழ்நாடு சாம்பியன்

சென்னை: தேசிய அளவிலான 3X3 கூடைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவிலேயே முதன் முறையாக தலா 3 பேர் கொண்ட அணிகளுக்கான 3X3 தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது (செப். 22-24). இந்திய கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் இணைந்து நடத்திய இந்த தொடரில் ஆண்கள், மகளிர் பிரிவுகளில் மொத்தம் 56 அணிகள் பங்கேற்றன.

ஆண்கள் பிரிவு அரையிறுதியில் கேரளாவை வீழ்த்தி பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணியும் பைனலுக்கு முன்னேறின. பைனலில் தமிழ்நாடு 17-16 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப் அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. கேரளா 3வது இடம் பிடித்தது.

மகளிர் பிரிவு பைனலில் கேரளா 20-15 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ரயில்வே 3வது இடம், தமிழ்நாடு 4ம் இடம் பிடித்தன. பட்டம் வென்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசாக தலா ₹3 லட்சம், கோப்பை வழங்கப்பட்டன. 2வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ₹2 லட்சம், 3வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ₹1 லட்சம் வழங்கப்பட்டது. கோப்பைகள் மற்றும் பரிசுகளை இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா, உயர்நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பட், சிறப்பு விருந்தினர்கள் கரண் சிங், செல்வகணேஷ், குல்விந்தர் சிங் வழங்கினர்.

இந்த தொடரில் இரு பிரிவிலும் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள், அடுத்த மாத இறுதியில் கோவாவில் நடைபெற உள்ள 37வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளன.

The post 3X3 கூடைப்பந்து போட்டி; தமிழ்நாடு சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,India ,Tournament ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...