×

கீழடி ஏ.ஆர் செயலி!

கீழடி அருங்காட்சியக தொல்பொருட்களை 3Dயில் பார்க்கும் வகையில் கீழடி புனைவு மெய்யாக்க செயலி (Keeladi Augment Reality (AR) App ஐ முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கீழடி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் உலகில் எங்கிருந்தும் யாரும் காணும் வகையில் இந்தசெயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத்திற்காக பிரத்தியேகமாக கீழடி Augment Reality (AR) செயலியை தமிழ்நாடு தொல்லியல் துறை உருவாக்கியுள்ளது. கீழடி அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள 200 தொல்பொருட்களை AR மற்றும் 3D முப்பரிமாணத்தில் பார்க்கலாம். 3D மற்றும் AR வியூவருடன் கலைப்பொருட்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். பார்வையாளர்கள் தங்களின் கைபேசி வாயிலாகவே அகழாய்வுக்குழி மற்றும் தொல்பொருட்களைப் பார்வையிடும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. கீழடியின் வரலாற்றைப் பற்றிய ஆழமான புரிதலை அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு கட்டங்களிலும் வைக்கப்பட்டுள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பெறலாம். கீழடி AR செயலி கீழடி பண்பாட்டுப் பெருமைகளை உலகளவில் பறைசாற்றும் வகையிலும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும், கல்வியறிவு பெறும் வகையிலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பயன்பெறும் வகையில் இந்தச் செயலி அமைக்கப்பட்டுள்ளது.

ஆஹா சாத்துக்குடி!

ஏழைகளின் பட்ஜெட்டில் கிடைக்கும் பழங்களில் மிக முக்கிய பழம் இந்த சாத்துக்குடி. விலையால் குறைவு என்றாலும் இந்த பயன்கள் விலைமதிப்பில்லாதது. சாத்துக்குடி அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அரிய பழமாகும். இது உடல் நலத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் உதவுகின்றது.சாத்துக்குடியில் வைட்டமின் – சி நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது.இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.

சாத்துக்குடி ஜூஸ் பருகுவது மட்டுமின்றி முகத்திற்கு ஃபேஸியல் ஆகவும் பயன்படுத்தலாம். என்றும் சருமத்தில் படியும் கறைகளை அகற்ற சாத்துக்குடி சாறு உதவும்.சருமத்தை பிளீச்சிங் செய்வதற்கும் சாத்துக்குடியை பயன்படுத்தலாம்.சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நன்கு பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். சாத்துக்குடி ஜூஸை தொடர்ந்து பருகிவர முகத்தில் கரும்புள்ளிகள் மறையும். முகப்பருக்களில் இருந்து ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் தீரும். காலை உணவைப் பெரும்பாலும் தவிர்ப்போர் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் பருகலாம்.

The post கீழடி ஏ.ஆர் செயலி! appeared first on Dinakaran.

Tags :
× RELATED “வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.....