×

வங்கதேச அணியுடனான 2வது டி20 போட்டி 96 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி

டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்து. 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச மகளிர் அணி களமிறங்கியுள்ளது.

இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.கடந்த 9ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று டாக்கா மைதானத்தில் 2வது டி20 போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் இந்திய அணி மளமளவென அனைத்து விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தானா (13), ஷபாலி வர்மா (19), யாஷிகா (11), தீப்தி ஷர்மா (10), அமன்ஜோத் கவுர் (14) ஆகியோர் மட்டுமே இரைட்டை இலக்க ரன்களை எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளையும், ஃபாத்திமா காதுன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச மகளிர் அணி களமிறங்கி விளையாடி வருகிறது. வங்கதேச அணி 2.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்களை எடுத்து சற்று தடுமாறி வருகிறது. 8 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேச அணி களத்தில் உள்ளது.

The post வங்கதேச அணியுடனான 2வது டி20 போட்டி 96 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி appeared first on Dinakaran.

Tags : women's team ,2nd T20 ,Bangladesh ,Dhaka ,T20 ,Indian women's team ,Dinakaran ,
× RELATED இந்தியா-தெ.ஆப்ரிக்கா பெண்கள் தொடர்: இன்று பெங்களூரில் முதல் ஒருநாள்