×

வங்கதேசத்துடன் டி20, ஒரு நாள் தொடர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு.! முக்கிய வீராங்கனைகளுக்கு ஓய்வு

மும்பை: வங்கதேசத்தில் நடைபெற உள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 2 வடிவ அணிக்கும் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் வரும் 9ம்தேதி முதல் டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் இந்திய மகளிர் அணி பங்கேற்று விளையாடுகிறது. இதில் பங்கேற்க உள்ள அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிகள் முறையே தேர்வு செய்துள்ளது. 6 போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்பிஎன்சிஎஸ்) நடைபெறுகிறது. டி20, ஒருநாள் கிரிக்கெட் என 2 அணிகளுக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்படுவார்.

அதே நேரத்தில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் பேட்டர் ரிச்சாகோஷ் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. ராதாயாதவ் மற்றும் ராஜேஸ்வரி கெயிக்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணி ஒப்பீட்டளவில் அனுபவமற்ற சுழற்பந்து வீச்சுடன் செல்ல விரும்புகிறது. ஜூலை 9 ஆம் தேதி முதல் டி20 போட்டி நடக்கிறது. 2வது மற்றும் 3வது போட்டிகள் முறையே ஜூலை 11 மற்றும் ஜூலை 13 ஆம் தேதிகளில் நடைபெறும். 2 நாள் இடைவெளிக்குப் பிறகு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 16-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி முறையே ஜூலை 19 மற்றும் ஜூலை 22 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இந்திய டி20 அணி

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா (வி.கீ), ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி (வி.கீ), அமன்ஜோத் கவுர், மேகனா, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பாரெட்டி, மின்னுமணி.

இந்திய ஒருநாள் அணி

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா(வி.கீ), ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், பிரியா புனியா, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பரெட்டி, சினே ராணா.

The post வங்கதேசத்துடன் டி20, ஒரு நாள் தொடர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு.! முக்கிய வீராங்கனைகளுக்கு ஓய்வு appeared first on Dinakaran.

Tags : T20I ,Bangladesh ,women's cricket team ,Mumbai ,BCCI ,women's ,ODI ,Dinakaran ,
× RELATED ஜிம்பாப்வே அணியுடன் டி20 தொடர்; இந்திய...