×

பாதாம் கிச்சடி பொங்கல்

தேவையானவை:

பாதாம் பருப்பு – 100 கிராம்,
ரவை – 1 கப்,
பொடியாக நறுக்கிய – கோஸ்,
கேரட், உருளை,
குடைமிளகாய்,
பச்சைப்பட்டாணி கலவை – 1½ கப்,
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்,
பொடியாக நறுக்கிய தக்காளி – தலா ½ கப்,
நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 2,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பட்டை,
கிராம்பு,
ஏலக்காய்,
புதினா,
மல்லித்தழைகள் – சிறிது,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

ரவையை நெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். 100 கிராம் பாதாமில் 75 கிராம் பாதாமை ஊற வைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். மீதி பாதாமை துருவி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி விழுது, புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்கவும். இத்துடன் காய்கறி கலவை, உப்பு, வறுத்த ரவை சேர்த்து அரைத்த பாதாம் விழுது தேவையான அளவு தண்ணீர் விட்டு கை விடாமல் கிளறவும். எல்லாம் சேர்ந்து குழைவாகி வரும்போது துருவிய பாதாம், நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மணம் வீசும் சத்து மிகுந்த பாதாம் கிச்சடி பொங்கல் ரெடி. வெங்காய ரெய்த்தாவுடன் ருசிக்கலாம்.

The post பாதாம் கிச்சடி பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்