×

மோசமான வானிலை திரும்பிச் சென்ற அமித்ஷா ஹெலிகாப்டர்

போபால்: பிரதமர் மோடியின் 9 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்துள்ளதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் நகரில் நேற்று பாஜ பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருந்தார். அதே போல் கோண்ட்வானாவை ஆட்சி புரிந்த ராணி துர்காவதியின் நினைவாக வீராங்கனை ராணி துர்காவதி கவுரவ யாத்திரையையும் அவர் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டீஸ்கர் மாநிலத்துக்கு நேற்று வந்த அமித் ஷா ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டரில் பாலகாட் பகுதிக்குச் சென்றார். ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக அமித்ஷாவின் ஹெலிகாப்டரால் தரையிறங்க முடியவில்லை. இதனால் ஹெலிகாப்டர் மீண்டும் ராய்ப்பூருக்கே திரும்பி சென்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மோசமான வானிலை திரும்பிச் சென்ற அமித்ஷா ஹெலிகாப்டர் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Bhopal ,Modi ,BJP ,Balaghat, Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து...