×

நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதி

*குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் நடவடிக்கை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதியை கலெக்டர் ஏற்பாடு செய்து நடவடிக்கை மேற்ெகாண்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்ெதாகை, பட்டா மாற்றம், அரசு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 437 பேர் மனு அளித்தனர். அதன்மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.அதேபோல், குறைதீர்வு கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மனுக்களை கணினியில் பதிவு செய்யவும், மனுக்களை அளிக்கவும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, வரும் வாரங்களில் இருந்து கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில், இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளன. மேலும், கடந்த வாரங்களில் மனுக்கள் அளித்திருந்த மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு, உதவி உபகரணங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டிருந்தபோது, செங்கம் அடுத்த சென்ன சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவர் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். கலெக்டரின் முன்பு நடந்த இந்த திடீர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் விரைந்துச் சென்று தடுத்து நிறுத்தினர்.

விசாரணையில், தனது பூர்வீக விவசாய நிலத்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும், பயிர் செய்யவிடாமல் தடுப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும், கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிப்பது சட்டப்படி தவறு என்பதால், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்ைக எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, தீக்குளிக்க முயன்ற சுரேஷ் மீது திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கலசபாக்கம் தாலுகா, அலங்காரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்களுடைய விவசாய நிலத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து, வழிவிட மறுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுவழியை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால், விளை பொருட்களை நிலத்தில் இருந்து ெகாண்டுவர முடியவில்லை.

இது தொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க தாமதமாவதாக ெதரிவித்தனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்ைத நடத்தினர். பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வழக்கம் போல, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

துறை அதிகாரிகளை சந்தித்த பின் கலெக்டரிடம் மனு

ேமலும், பொதுமக்கள் தங்கள் மனுக்களை நேரடியாக கலெக்டரிடம் அளிக்கும் முன்பு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியுடன் மனு தொடர்பான விளக்கங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் செய்திருந்தார். அதன்படி, குறைதீர்வு கூட்டம் நடந்த அரங்கத்தில், துறை அதிகாரிகளை மனுதாரர்கள் சந்தித்த பிறகு, கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

The post நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதி appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,collector ,Thiruvannamalai Collector's Office ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத்...