புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் பாஜ தரப்பில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. இதில் திமுக தரப்பில் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து டி.ஆர்.பாலு அளித்த பேட்டியில் “அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் இந்த கூட்டத்தொடரில் எந்தெந்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
முதலில் கவன ஈர்ப்பு தீர்மானமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி மற்றும் கொள்கைக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்த கவனஈர்ப்பு தீர்மானத்தை விவாதிக்க வேண்டும். இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்திய குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். என்று வலியுறுத்தினோம். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.3000ஆக உயர்த்துவது, மழை வெள்ளதில் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை விடுவிக்காதது ஆகியவை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
The post பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம்: டெல்லியில் டி.ஆர்.பாலு பேட்டி appeared first on Dinakaran.