சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பைபாஸ் சாலை மேலவாணியங்குடியில் ஆசிரமம் உள்ளது. இங்கு மதுரையை சேர்ந்த சுரேந்தர் சுவாமி (70), தங்கியிருந்து அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். அறக்கட்டளை பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த நிலையில் இதில் பலர் உறுப்பினராக இருந்துள்ளனர். இந்நிலையில் சுரேந்தர் சுவாமி உடல் நலமின்றி உள்ளதாகவும், அவரை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் ஜீவசமாதி அடைந்து விட்டதாக கூறுவதற்காக அதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை உறுப்பினர்களாக உள்ள சிலர் செய்வதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த இந்த மடத்திற்கு வருகை தரும் சிலர் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் மடத்துக்கு சென்று சுரேந்தர் சுவாமியை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனையில் சேர்த்தார்.
The post சாமியாரை ஜீவசமாதி அடைய வைக்க முயற்சி appeared first on Dinakaran.