கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய நிர்வாகிகள் ஒரு மதத்தினரை இழிவுபடுத்தி, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சசிக்குமார், வெறைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், நிர்வாகி கணேஷ்பாபு, சிவ சங்கர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மதமோதல் முயற்சி அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
