×

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்லட கீழடுக்கு சுழற்சி காரணமாக 24 மணி நேரத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்லட கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்திற்கு ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நாளை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செஸ்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செஸ்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், திருவான்மியூர், அடையாறு, ராயப்பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் புறநகர் பகுதிகளான மேடவாக்கம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு லட்சத்தீவு பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,Chennai ,Coimbatore ,Theni ,Dindigul ,Tirupur ,Nilgiris ,Dinakaran ,
× RELATED வளி மண்டல சுழற்சி தமிழகத்தில் அக்.1ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு