×

முதலீடின்றி ரூ.2000 கோடி சொத்து வாங்க முயற்சி: சோனியா, ராகுல் மீது பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில், ‘‘நேஷனல் ஹெரால்டின் ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துகளை காந்திகள் தங்களது பாக்கெட்டில் ஒரு பைசா கூட முதலீடு செய்யாமல் கையகப்படுத்த முயற்சித்துள்ளனர். காங்கிரஸ் தனது பத்திரிக்கையை ஏடிஎம்ஆக பயன்படுத்தி உள்ளது. இரண்டு காந்திகளும்(சோனியா, ராகுல்) யங் இந்தியன் நிறுவனத்தின் 76சதவீத பங்குகளை வைத்திருந்தனர். இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் ரூ.50லட்சம் கடன் வழங்கியுள்ளது. ஒரு அரசியல் கட்சி கடன் கொடுக்க முடியுமா? ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் அரசியல் தலைவர்கள் தங்கள் மீதான வழக்குகளில் விரைவான விசாரணையை கோரி நீதிமன்றங்களை நாட வேண்டும். அவர்களுக்கு தைரியம் இருந்தால் அவர்கள் இதனை செய்ய வேண்டும். மேலும் காங்கிரஸ் ஊழலின் மாதிரியாகும். நேஷனல் ஹெரால்டு வழக்கு காங்கிரசை திகைக்க வைத்துள்ளது” என்றார்.

The post முதலீடின்றி ரூ.2000 கோடி சொத்து வாங்க முயற்சி: சோனியா, ராகுல் மீது பாஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Sonia ,Rahul ,New Delhi ,Former Union Minister ,Anurag Thakur ,Gandhis ,National Herald ,Congress ,Dinakaran ,
× RELATED கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்...