×

சட்டபேரவை கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. ஆண்டும் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மதம் 7,8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளதால் ஜனவரி 2வது வாரத்தில் கூட்டத்தொடரை தொடங்கலாமா அல்லது பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கலாமா என ஆலோசனைசெய்யப்படும் . விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆளுநரின் உரையில் அரசின் நிதிநிலை, புதிய திட்டங்கள், அரசின் கொள்கைகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் கடந்த ஆண்டு அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் தனது உரையில் தெரிவிப்பார்.

ஆளுநர் தனது உரையில் ஆங்கிலத்தில் வாசித்த பிறகு, அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டபேரவையில் வாசிப்பார். ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வாடிக்கை தான் என்றாலும், இந்த ஆண்டு ஆளுநர் உரையை முன்னிட்டு தமிழ்நாட்டின் அரசியல் களம் சற்று பரப்பரப்பாக இருக்கும்

 

The post சட்டபேரவை கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Legislative ,Assembly ,Legislative Assembly ,
× RELATED பட்டாசுக்கடைகள் வைக்க விரும்புவோர்...