×

அசாமில் இந்தாண்டு மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 11 பேர் பலி

கவுகாத்தி: அசாமில் இந்தாண்டு மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 11 பேர் இறந்துள்ளனர் என்று மாநில அமைச்சர் தெரிவித்தார். அசாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கேசப் மஹந்தா அளித்த பேட்டியில், ‘அசாம் மாநிலத்தில் இந்த ஆண்டு மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 11 பேர் இறந்துள்ளனர், மேலும் 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ரூ. 1 லட்சம் வரை உதவி வழங்கியுள்ளோம்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். அதேபோல் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 17 பேர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில், அசாம் மாநிலத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் மொத்தம் 442 பேர் இறந்துள்ளனர். அதே காலகட்டத்தில் மொத்தம் 2,145 பேர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்பது டெங்கு, மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றுடன் ஃபிளவி வைரஸ் நோயாகும். கொசுக்களால் இந்நோய் பரவுகிறது’ என்றார்.

The post அசாமில் இந்தாண்டு மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 11 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Assam ,Gauwahati ,state minister ,
× RELATED அசாமில் வெளுத்து வாங்கும் கனமழை;...