- இந்தியா
- ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை மகளிர் ஹாக்கி
- ஜப்பான்
- ராஜ்கிர்
- பெண்கள்
- அணி
- ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை
- ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி
- பீகார் மாநிலம்
- ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டி
- தின மலர்
ராஜ்கிர்: ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை அரை இறுதியில் இன்று ஜப்பானுடன் மோதும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, அபாரமாக ஆடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டி நவ.11ம் தேதி பீகார் மாநிலம் ராஜ்கிரில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, கொரியா, சீனா என, 6 அணிகள் களம் கண்டன. அதில், தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வென்ற இந்தியா 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து முதல் அணியாக அரை இறுதியை உறுதி செய்தது.
சீனா 2, மலேசியா 3, ஜப்பான் 4வது இடத்தை பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த இந்த 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், முதல் அரையிறுதியில் சீனா-மலேசியா அணிகள் விளையாடுகின்றன. அதே போல் 2வது அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இந்த 2 அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இருக்கிறது. அதனால் இந்திய வீராங்கனைகளுக்கு இறுதி ஆட்ட வாய்ப்பு மட்டுமல்லாமல் கோப்பையை வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
The post ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை பெண்கள் ஹாக்கி இறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? அரை இறுதியில் ஜப்பானுடன் மோதல் appeared first on Dinakaran.