×

யு-19 ஆசிய கோப்பை வங்கதேசம் சாம்பியன்

துபாய்: யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில், ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணியை 195 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசியது. வங்கதேச யு-19 அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன் குவித்தது. தொடக்க வீரர் ரகுமான் ஷிப்லி 129 ரன் (149 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), சவ்துர் ரிஸ்வான் 60, ஆரிபுல் இஸ்லாம் 50, கேப்டன் ரகுமான் ரப்பி 21 ரன் விளாசினர். யுஏஇ பந்துவீச்சில் அய்மன் அகமது 4 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து 50 ஓவரில் 283 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அமீரகம் 24.5 ஓவரில் 87 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக துருவ் பரஷார் 25 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச யு-19 பந்துவீச்சில் மரூப் ம்ரிதா, ரோகனத் தவுல்லா போர்சன் தலா 3 விக்கெட், இக்பால் இமான், ஷேக் ஜிபான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 195 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வங்கதேச யு-19 அணி ஆசிய கோப்பையை முத்தமிட்டது. இந்த தொடரின் அரையிறுதியில் வங்கதேசம் இந்தியா யு-19 அணியையும், யுஏஇ பாகிஸ்தான் யு-19 அணியையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

The post யு-19 ஆசிய கோப்பை வங்கதேசம் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : U-19 Asia Cup ,Bangladesh ,Dubai ,U-19 Asia Cup ODI ,United Arab Emirates ,UAE ,Dinakaran ,
× RELATED வங்க வீரர் ஷாகிப் ஓய்வு